சமையல் எரிவாயு சிலின்டர் விநியோகம் நாடு முழுவதும் நிறுத்தப்பட்டது!

ஆசிரியர் - Editor I
சமையல் எரிவாயு சிலின்டர் விநியோகம் நாடு முழுவதும் நிறுத்தப்பட்டது!

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலின்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவான நிலையில் எரிபொருள் விநியோகத்தை மறு அறிவித்தல்வரை நிறுத்த லட்றோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

இதேவேளை, இது தொடர்பில் லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ. கே. வேகபிடிய கருத்து தெரிவித்தபோது, ​​நுகர்வோர் விவகார அதிகார சபையோ அல்லது அமைச்சோ அவ்வாறான எந்த அறிவித்தலையும் தமது நிறுவனத்திற்கு வழங்கவில்லை என கூறினார்.

எனவே, தமது நிறுவனத்தின் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாடு முழுவதும் பரவலாக எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Radio