நாடு முடக்கப்படுமா..? அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஸ் பத்திரண விளக்கம்..
நாட்டை முடக்கும் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் ரமேஸ் பத்திரன கூறியிருக்கின்றார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,
தற்போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு பார்க்கும்போது எதிர்காலத்திலும் நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை.
எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.