பாண், கொத்து ரொட்டி உள்ளிட்ட கோதுமை மாவை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்களின் விலை அதிகரிப்பு..!
நாட்டில் கோதுமை மா விலை அதிகரிப்பை தொடர்ந்து பாண், ரொட்டி, சிற்றுண்டி உள்ளிட்ட கோதுமை மாவை மூலப் பொருளாக கொண்ட சகல உணவுப் பண்டங்களினதும் விலைகள் அதிகரிக்கப்படுவதா சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் தொிவித்திருக்கின்றது.
இதற்கமைய 450 கிராம் நிறைகொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (28) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இவ்வாறு பாணின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் நேற்று அறிவித்திருந்தனர். இதனையடுத்து, கொத்து ரொட்டி விலையை 10 ரூபாவினாலும் சிறிய உணவுகளுக்கான விலையை 5 ரூபாவினாலும்
நாளை (29) முதல் அதிகரிக்கவும் சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளது.