SuperTopAds

திருமண நிகழ்வுகள், திரையரங்குகள், ஹோட்டல்கள், விழாக்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்..!

ஆசிரியர் - Editor I
திருமண நிகழ்வுகள், திரையரங்குகள், ஹோட்டல்கள், விழாக்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்..!

நாட்டில் திருமண நிகழ்வுகள், திரையரங்குகள், உணவகங்கள், ஹோட்டல் வளாகங்கள், விழாக்களை சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக மீண்டும் வழக்கம்போல் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சில் நேற்யை தினம் விசேட அறிக்கையொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த தகவலை தெரிவித்தார். 

முன்பு 25%, 50% போன்ற நபர்களின் அனுமதியுடன் இந்தத் துறைகள் முறையாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன.எவ்வாறாயினும் இவ்வாறான நிகழ்வுகள் மற்றும் திறப்புகள் இடம்பெறும் போது அது தொடர்பிலான வரையறைகள் 

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் இடம்பெறும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.இந்த துறைகள் மீண்டும் திறக்கப்படும் போதும் முகக் கவசம் அணிதல், 

பூரண தடுப்பூசி, சமூக இடைவேளை போன்றவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தத் துறைகளைச் செயல்படுத்துபவர்களும், அதில் இணையும் நபர்களும் சுகாதார வழிகாட்டுதல்கள் 

மற்றும் சுகாதாரக் கொள்கைகளில் முழு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் இது தொடர்பாக மீண்டும் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.

கொவிட் அனர்த்தத்தின்போது நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கு நீண்ட கால வேலைத்திட்டம் தேவை எனவும், இலாபத்திற்காக குறுகிய கால வேலைத்திட்டங்களை நாட வேண்டாம் எனவும் 

அமைச்சர் இதன்போது கேட்டுக்கொண்டார்.