SuperTopAds

இலங்கையில் அமெரிக்க வெளியுறவு கொள்கையில் மனித உரிமைகள் முக்கியமானவை..!

ஆசிரியர் - Editor I
இலங்கையில் அமெரிக்க வெளியுறவு கொள்கையில் மனித உரிமைகள் முக்கியமானவை..!

இலங்கையில் அமொிக்காவின் வெளிவிவகார கொள்ளையில் மனித உரிமைகள் மிக முக்கியமானவை, அத்தோடு நிரந்தர சமாதானத்திற்காக இலங்கை தமிழர்களுடன் அமொிக்கா இணைகிறது. என அமொிக்க உதவி இராஜாங்க செயலாளர் தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் தொிவித்துள்ளார். 

தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியவற்றுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ருவிட்டர் பதிவில், 

இலங்கைத் தமிழ் மக்களுடன் நிரந்தர சமாதானத்தையும், அவர்களின் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முழுக் குரலையும் தேடுவதில் தானும் இணைந்து கொள்வதாக லூ கூறினார்.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் உலகளாவிய தமிழ் மன்றத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் அவர்கள் வெள்ளை மாளிகை உட்பட உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர் சந்திப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.