ஓய்வு பெறவுள்ளோருக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு..!
2022ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் 55 வயதை பூர்த்தி செய்தவர்கள் ஓய்வுபெற முடியும் என பொது சேவைகள் மற்றும் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கூறியுள்ளார்.
இன்று (24) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தத் தீர்மானம் நடைமுறைக்கு வரும் திகதி தொடர்பில் அமைச்சர் ஜனக பண்டார தென்னக் கோனிடம் வினவியபோது, ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிப்பதன் காரணமாக டிசம்பர் மாத இறுதியில் ஓய்வு பெறும் மக்களும்
ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தார்.