இரசாயன உரம், கிருமி நாசினி இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டது! இன்று முதல் நடைமுறைக்கு..
நாட்டுக்கு இரசாயன உரம், கிருமி நாசினி, திரவ உர இறக்குமதி அனுமதியை தனியாருக்கு வழங்குவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியிருக்கின்றார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், இவைகளின் இறக்குமதிக்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் உடன் அமுலாகும் வகையில் இரத்துச் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.