மதுபோதையில் ஊருக்குள் அட்டகாசம்..! பிரதேசசபை உறுப்பினரை கட்டிவைத்து கவனித்த பின் பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள்..
மதுபோதையில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மக்களுடன் தகாதமுறையில் நடந்துகொண்ட பிரதேசசபை உறுப்பினரை மின் கம்பத்தில் கட்டிவைத்து கவனித்த பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் களுத்துறை - கல்பாத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாணந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் எனக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினர் மேலும் சிலருடன் கல்பாத்த பகுதிக்கு வந்து மது அருந்தியுள்ள நிலையில்,
அங்கிருந்து கல்பாத்த, பஹுருபொல பிரதேசத்துக்கு அவர் தனியாக சென்று பிரதேசவாசிகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.இதனையடுத்து, அங்கிருந்த பிரதேசவாசிகள், குறித்த பிரதேச சபை உறுப்பினரை மின்கம்பத்தில் கட்டி வைத்து, காவல்துறை அவசர பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.
அழைப்பின் பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சந்தேகநபர் கைதுசெய்து, நாகொட வைத்தியசாலையின் வைத்தியர் முன்னிலையில் பிரசன்னப்படுத்தியபோது, அவர் மது அருந்தியிருந்தமை உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், சந்தேக நபரை இன்று (22) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.