நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையினர்..! வர்த்தமானி அறிவிப்பு மேலும் ஒரு மாதகாலத்திற்கு..
நாடு முழுவதும், நாட்டின் கடற்பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து ஆயுதம் தாங்கிய படைகளையுமு் அழைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார்.
இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
ஆயுதம் தாங்கிய படையினரை அமைதியைபேண அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. ஒரு மாத காலத்துக்கு அமுலாகும் வகையில் ஒவ்வொரு மாதமும் 22 ஆம் திகதி
இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.