SuperTopAds

தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் நடைமுறை..! நாடாளுமன்றின் அனுமதிக்கு வருகிறது, சுகாதார அமைச்சு தகவல்..

ஆசிரியர் - Editor I
தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் நடைமுறை..! நாடாளுமன்றின் அனுமதிக்கு வருகிறது, சுகாதார அமைச்சு தகவல்..

தடுப்பூசி பெறாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுக்கும் வகையில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சட்ட ஆவணங்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொது இடங்களுக்குச் செல்லும்போது தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் யோசனைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அண்மையில் அனுமதி வழங்கியது.

இது தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, வரவு செலவுத்திட்ட விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருவதால் அதற்கான நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளதாக தெரிவித்தார்.