ஒன்ற விட்ட ஒரு நாள் பாடசாலையை நடாத்துவதற்கு திட்டம்! சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..
மாணவர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடசாலைகளை நடாத்துவதற்கு ஆராய்வதற்காக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
கண்டியில் இன்று (19) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கும்போது, நாம் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். அனைத்து பாடசாலைகளுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது இரு குழுக்களாக பிரித்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடசாலைகளை நடாத்துவது குறித்த கவனம் செலுத்தியுள்ளோம்.
என்று தெரிவித்தார்.