நாடு மீண்டும் ஒரு முடக்கத்தை சந்திக்குமா? சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்..
நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்குமானால் நாடு முடக்கத்தை நோக்கி செல்லும் என சுகாதார அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் திடீரென அதிகரிப்பு ஏற்பட்டால், முடக்கம் ஒரு தெரிவாக இருக்கும் என்று சுகாதார அமைச்சின் உயர்மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சில நாடுகள் ஏற்கனவே மீண்டும் முடக்கத்தை அமுலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் முடக்கத்தை தடுக்க பொதுமக்களும் அரசியல்வாதிகளும் பொறுப்புடன் செயற்படவேண்டும்.
மற்றொரு முடக்கம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதை அதிகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.