நாடு முழுவதும் திருமண நிகழ்வுகளில் மதுபான விருந்து நடந்தால் மதுபானம் விற்றவருக்கு நடவடிக்கை!
நாடு முழுவதும் திருமண நிகழ்வுகளில் மதுபான விருந்து நடாத்த இடமளிக்கப்படாது. எனவும், மதுபான விருந்து நடைபெற்றால் அதற்கு மதுபானம் விற்பனை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும்.
மேற்கண்டவாறு மதுவரி திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, புதிய சுகாதார வழிகாட்டலுக்கமைய நேற்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை,
திருமண நிகழ்வுகளுக்கு மதுபானங்கள் விநியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்துவது குறித்த காலப்பகுதியில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும்,
சுகாதார வழிகாட்டல்களை அமுல்படுத்தக்கூடிய அதிகாரம் காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு காணப்படுவதாகவும் மதுவரித் திணைக்கள ஆணையாளர் குறிப்பிட்டார்.