ஆர்யா செய்த துரோகம் துயரத்தில் இருந்த சீதாலட்சுமிக்கு உதவிய மற்ற இரண்டு போட்டியாளர்கள்
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா பலரும் எதிர்பார்த்தது போலவே எந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் இந்த நிகழ்ச்சி வெறும் டிராமா என சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் வந்தது.
திருமணம் செய்துகொள்கிறேன் என மூன்று பெண்களை இறுதி வரை கொண்டுவந்து இப்படி திடீர் பல்டி அடித்தது துரோகம் எனவும் சிலர் கூறுகின்றனர்.
இந்நிலையில் ஆர்யா இப்படி செய்துவிட்டதால் கேரளாவை சேர்ந்த குஞ்சு என்கிற சீதாலட்சுமி சோகத்தில் மூழ்கிவிட்டராம். அதனால் அவரை அசுவாசப்படுத்த மற்ற இரண்டு போட்டியாளர்கள் – ஸ்வேதா மற்றும் ஸ்ரியா ஆகியோர் முயன்றுள்ளனர்.
நடந்ததை மறக்க அவர்கள் ஒன்றாக பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வருகிறார்களாம். அந்த புகைப்படங்களை அவர்கள் சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டுள்ளனர்.