ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் உள்நாட்டு தலைவர் சுட்டுக் கொலை!!

நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாத குழுவின் புதிய தலைவரான மலாம் பாகோ சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத குழுவின் உள்நாட்டு அமைப்பான ஐ.எஸ்.ஐ.எல். குழுவின் தலைவரே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பாபகனா மோங்குனோ நேற்று தெரிவித்தார்.