இன்றைய நாள் எப்படி 15/04/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 15/04/2018

இன்று!

விளம்பி வருடம், சித்திரை மாதம் 2ம் தேதி, ரஜப் 27ம் தேதி,
15.4.18 ஞாயிற்றுக்கிழமை தேய் பிறை, சதுர்த்தசி திதி காலை 8:34வரை
அதன் பின் அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம் நாளை அதிகாலை 4:29 வரை
அதன்பின் அசுவினி நட்சத்திரம், அமிர்த,சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30-6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00-1:30 மணி
* குளிகை : மதியம் 3:00-4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூரம்
பொது : சூரியன் வழிபாடு. சர்வ அமாவாசை.நதி கடல் நீராடல் சிறப்பு.

மேஷம்: நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். வருமானம் உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தினரிடம் பாராட்டு வெகுமதி பெறுவர். குழந்தைகளின் செயல் மனதை மகிழ்விக்கும். ஆடை, ஆபரணம் சேரும்.

ரிஷபம்: பிறர் கூறும் குறைகளை கண்டு கொள்ள வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மூலதனம் அதிகம் தேவைப்படும். லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடலாம். நண்பர்களுடன் பொழுதுபோக்க வாய்ப்புண்டு.

மிதுனம்: குடும்பத்தில் குழப்பம் உண்டாகி மறையும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சுமாராக இருக்கும். மிதமான வருமானம் கிடைக்கும். பெண்கள் நகை, பணத்தை கவனமாக கையாளவும். வீடு, வாகன வகையில் மராமத்துச் செலவு ஏற்படும்.

கடகம்: உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இலக்கு எளிதில் பூத்தியாகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெண்கள் விரும்பிய பொருள் வாங்குவர். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும்.

சிம்மம்: குடும்பத்தில் வீண் விவாதத்தை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக உழைப்பீர்கள். செலவில் சிக்கனம் தேவை. தெய்வ வழிபாடு மன அமைதிக்கு வழிவகுக்கும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்

கன்னி: எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். பணவரவு படிப்படியாக அதிகரிக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். . அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டாகும்.

துலாம்: பிறரிடம் குடும்ப விஷயத்தை பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் விழிப்புடன் செயல்படவும். மிதமான லாபம் கிடைக்கும். ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவர்.

விருச்சிகம்: எதிரியால் இருந்த தொல்லை விலகும். சமயோசித செயலால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். தாராள பணவரவு இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் காட்டுவர். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

தனுசு: உறவினர் அதிக அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகி்ழ்வர். உறவினர் வருகையால் சந்தோஷம் கூடும்.

மகரம்: தகுதிக்கு மீறிய செயலில் ஈடுபட வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேறும். வருமானம் திருப்தி தரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.

கும்பம்: புதியவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணக்கடன் ஓரளவு அடைபடும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பர்.

மீனம்: அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான மாற்றம் செய்வீர். தாராள பணவரவு இருக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். பணியாளருக்கு விரும்பிய சலுகை கிடைக்கும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு