இன்றைய நாள் எப்படி 14/04/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 14/04/2018

இன்று!

விளம்பி வருடம், சித்திரை மாதம் 1ம் தேதி, ரஜப் 26ம் தேதி,
14.4.18 சனிக்கிழமை தேய்பிறை, திரயோதசி திதி காலை 8:42 வரை
அதன்பின் சதுர்த்தசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் நாளை அதிகாலை 4:22 வரை
அதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்த,மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00-10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30-3:00 மணி
* குளிகை : காலை 6:00-7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : மகம்
பொது : சிவராத்திரி, சிவன் வழிபாடு.

மேஷம்: செயலில் உற்சாகம் அதிகரிக்கும். அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவை குறையின்றி நிறைவேறும். பெண்கள் எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

ரிஷபம்: பணியில் கூடுதல் கவனம் தெவை. தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சராசரி பணவரவு இருக்கும். உறவினர் வழியில் செலவு ஏற்படலாம். பிள்ளைகளின் நற்செயல் ஆறுதல் அளிக்கும். பெண்களுக்கு பொறுமை தேவை.

மிதுனம்: தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். கடன் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். உறவினரால் உதவி கிடைக்கும்.

கடகம்: சமயோசிதமாக செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். லாபம் அதிகரிக்கும். உறவினர்களிடம் நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். வீடு, வாகன வகையில் மராமத்து செலவு ஏற்படலாம்.

சிம்மம்: நண்பரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பெண்கள் சிக்கனம் மூலம் சேமிக்க முயல்வர். உடல்நலனில் அக்கறை தேவை. வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கன்னி: சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிக்கும். உபரி வருமானம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும். பெண்கள் தாய்வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வர். நண்பரால் உதவி உண்டு.

துலாம்: குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். தொடர்பில்லாத பணியை ஏற்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பயண திட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

விருச்சிகம்: பெற்றோரின் வழிகாட்டுதலை மதித்து செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி உண்டாகும். பணவரவு திருப்திகரமாகும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். பணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி கிடைக்கும்.

தனுசு: சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சிக்கு கூடுதல் உழைப்பு அவசியம். சீரான வருமானம் கிடைக்கும். சுப நிகழ்வில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் செயல்பாட்டை மென்மையாக கண்டிக்கவும்.

மகரம்: அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரம் சார்ந்த குறையை சரிசெய்வது நல்லது. லாபம் சுமார். பெண்களுக்கு சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். குழந்தைகளின் நற்செயலை ஊக்கப்படுத்துவீர்கள்.

கும்பம்: திட்டமிட்ட பணியில் திடீர் மாற்றம் செய்வீர்கள். தொழில் வியாபாரம் சார்ந்த குறையை பிறரிடம் சொல்ல வேண்டாம். பெண்கள் வீண் செலவை தவிர்ப்பது நல்லது. வீடு,வாகன பராமரிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

மீனம்: அனைவரிடமும் அன்பு காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இலக்கு பூர்த்தியாகும். பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் கலை அம்ச பொருள் வாங்குவர். சுபசெய்தி வீடு தேடி வரும்.