இன்றைய நாள் எப்படி 13/04/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 13/04/2018

இன்று!

ஹேவிளம்பி வருடம், பங்குனி மாதம் 30ம் தேதி,ரஜப் 25ம் தேதி,
13.4.18 வெள்ளிக்கிழமை தேய் பிறை, துவாதசி திதி, காலை 8:18 வரை
அதன்பின் திரயோதசி திதி பூரட்டாதி நட்சத்திரம் இரவு 3:43 வரை
அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : 
காலை 9:00-10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30-12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00-4:30 மணி
* குளிகை : காலை 7:30-9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்
பொது : பிரதோஷம்.நந்தீஸ்வரர் வழிபாடு.

மேஷம்: முக்கியமான செயல் தாமதமாக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாரான அளவில் இருக்கும். சேமிப்பு பணம் முக்கியமான செலவுகளுக்கு பயன்படும். மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

ரிஷபம்: சிரமங்களை சமயோசிதமாக சரி செய்வீர்கள். தொழில் வியாபார கூடுதல் உழைப்பு அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். வாகன பராமரிப்பில் கவனம் செலுத்துவீர்கள். தாயின் அன்பும் ஆசியும் பெறுவீர்கள்.

மிதுனம்: புதிய செயல்களால் வாழ்வு மேம்படும். தொழில் வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். வருமானம் திருப்தியளிக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் குடும்பத்திற்கு பெருமை தேடித் தருவர்.

கடகம்: மற்றவரின் அலட்சிய பேச்சை பொருட்படுத்த வேண்டாம். அதிக உழைப்பு தொழில் வளர்ச்சியை சீராக்கும். மிதமான பணவரவு கிடைக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு ஏற்படும்.

சிம்மம்: திட்டமிட்ட செயல் இனிதாக நிறைவேறும். குடும்ப உறுப்பினர் மத்தியில் அன்பு அதிகரிக்கும். தொழில் வியாபார வியத்தகு முன்னேற்றம் பெறும். பணவரவு அதிகரிக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கன்னி: எதிர்காலம் வளர்ச்சி குறித்து சிந்திப்பீர்கள். உழைப்பால் தொழில் வியாபார நடைமுறை சீராகும். வருமானம் மிதமாக இருக்கும். உணவுப்பொருள் தரமறிந்து உண்ணவும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

துலாம்: பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபட்டு லாபம் ஈட்டுவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் கலையம்ச பொருட்கள் வாங்குவர். எதிர்பார்த்தசுபசெய்தி வந்து சேரும்.

விருச்சிகம்: இஷ்ட தெய்வ அனுகிரகத்தால் முக்கிய செயல் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். லாபம் திருப்திகரமாக இருக்கும். இயன்ற அளவில் பிறருக்கு உதவுவீர்கள். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர்.

தனுசு: மன குழப்பத்தை சம்யோசிதமாக சரி செய்வீர்கள். நண்பரின் ஆலோசனை நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் அதிக உழைப்பு தேவைப்படும். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்

மகரம்: அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் கவனம் தேவை. பணவரவு சுமாராக இருக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும். உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கும்பம்: நண்பரின் உதவியால் நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இடையூறு விலகும். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தினர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். பெண்கள் கணவரின் அன்புக்கு உரியவராவர்.

மீனம்: வாழ்வு சுமூகமாக அமைந்திடும். தொழில் வியாபாரத்தில் நவீன மாற்றம் செய்வீர்கள். பணவரவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.