இன்றைய நாள் எப்படி 12/04/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 12/04/2018

இன்று!

ஹேவிளம்பி வருடம், பங்குனி மாதம்; 29ம் தேதி,ரஜப் 24ம் தேதி,
12.4.18 வியாழக்கிழமை தேய்பிறை, ஏகாதசி திதி காலை 7:25 வரை
அதன் பின் துவாதசி திதி, சதயம் நட்சத்திரம் இரவு 2:33 வரை
அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், மரண,சித்தயோகம்

* நல்ல நேரம் : காலை 10:30-12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30-3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00-7:30 மணி
* குளிகை : காலை 9:00-10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : பூசம்
பொது : சர்வ ஏகாதசி.பெருமாள் வழிபாடு

மேஷம்: அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம். தொழிலில் பொறுமை அவசியம். மிதமான பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் பிடிவாத குணத்துடன் செயல்படுவர்.

ரிஷபம்: நண்பர்களிடம் பொது விஷயம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உணவு விஷயத்தில் கவனம் அவசியம். மனைவியின் ஆலோசனை நிம்மதிக்கு வழிவகுக்கும்.

மிதுனம்: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். சேமிக்கும் விதத்தில் லாபம் கிடைக்கும். குடும்ப தேவை குறைவின்றி நிறைவேறும். உடல் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

கடகம்: பிறர் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரம் மந்தமாக இயங்கும். சுமாரான அளவில் பணவரவு இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். அரசியல்வாதிகள் பேசுவதில் நிதானம் வேண்டும்.

சிம்மம்: நல்ல எண்ணங்களால் உற்சாகமுடன் இருப்பீர். அன்றாடப் பணியில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி கிடைக்கும். நல்ல பணவரவு இருக்கும். பணியாளர்களுக்கு சக ஊழியர் மத்தியில் பாராட்டு கிடைக்கும்.

கன்னி: தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். தொழிலில் விற்பனை மந்தமாக இருக்கும். லாபம் சுமார். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். உடலுக்கு சீரான ஓய்வு தேவை. பெண்களுக்கு பேச்சில் பொறுமை தேவை.

துலாம்: உங்களின் நலம் விரும்பியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் சுமூகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர்.

விருச்சிகம்: நேர்மை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் திட்டமிட்ட இலக்கை அடையும். சேமிப்பு கூடும். பெண்களுக்கு தாய் வீட்டாரின் உதவி கிடைக்கும். மாணவர்கள் கண்ணும் கருத்துமாக படிப்பர். வாகன வகையில் இனிய அனுபவம் உண்டாகும்.

தனுசு: அளவுடன் பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் சிறு குறுக்கீடு வந்து சரியாகும். அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் அதிகாரிகளின் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது. தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.

மகரம்: செயலில் நிதானம் பின்பற்றுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் நேரம் தவறாமை வேண்டும். சராசரி பணவரவு இருக்கும். வெளியூர் பயணத்தால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர்.

கும்பம்: சமூக நலனில் ஈடுபாடு கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனம்: முக்கியமான செயல் எளிதில் நிறைவேறும். தொழில் வியாபாரம் செழிக்க புதிய திட்டம் வகுப்பீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும். அரசியல்வாதிகளுக்கு அரசு உதவி கிடைக்கும்.