யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 பேர் தங்கள் பெயரில் அனுதியை பெற்று பூநகரி - கௌதாரிமுனைக்கு சீன நாட்டவர்களை கொண்டுவந்தனரா..?

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 பேர் தங்கள் பெயரில் அனுதியை பெற்று பூநகரி - கௌதாரிமுனைக்கு சீன நாட்டவர்களை கொண்டுவந்தனரா..?

கிளிநொச்சி - பூநகரி கௌதாரிமுனை பகுதியில் சீன நாட்டவர்களால் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்ட விவகாரத்தில் யாழ்ப்பாணத்தில் கடலட்டை வளர்க்கும் ஒருவருடைய பெயரில் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு எல்லைக்குள் பண்ணை அமைத்துள்ளபோதிலும் பூநகரி பிரதேச செயலாளரினதோ அல்லது கிளிநொச்சி மாவட்ட கடல் தொழில் திணைக்களத்தினதோ அனுமதி பெறப்படவில்லை.

இருந்த போதிலும் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளரிடம்  இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது.இந்த அனுமதியானது யாழ்ப்பாணத்தவர் மூவரின் பெயரில் வழங்கிய அனுமதியில் 

உள்ளூர் வாசிகளுடன் இணைந்து சீன நாட்டவரே அதிகம் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மாவட்ட எல்லைப் பரப்பிற்குள் எவ்வாறு யாழ்.மாவட்டம் அனுமதி வழங்கியது என வினாவியபோது 

அரியாலைக்கும் கௌதாரிமுனைக்கும் இடைப்பட்ட தூரத்தில் உள்ள சிறு தீவை அண்டிய பகுதி யாழ்.மாவட்ட நிர்வாகப் பகுதியாகவே இருக்கும் நிலமையில் அங்கே தொழில் புரிய வழங்கிய அனுமதியை பயன்படுத்தி 

ஒரு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கௌதாரிமுனைப் பகுதிக்குள் தொழில் புரிவதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு