பூநகரி - பூவரசன் தீவில் கடலட்டை பிடிக்கும் சீனர்கள்! அனுமதித்தது யார்? மண்டையை சொறியும் அதிகாரிகள்..

ஆசிரியர் - Editor I
பூநகரி - பூவரசன் தீவில் கடலட்டை பிடிக்கும் சீனர்கள்! அனுமதித்தது யார்? மண்டையை சொறியும் அதிகாரிகள்..

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பூவரசன் தீவில் எந்தவொரு அனுமதியும் பெறாமல் இலங்கை - சீன கூட்டு நிறுவனம் ஒன்று கடலட்டை பண்ணை அமைத்து தொழில் செய்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

கடல் அட்டை பண்ணையை அமைப்பதற்கு பிரதேச மக்கள் பல தடவைகள் கோரியும் அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

எனினும் தற்போது சீனர்கள் அட்டைக் குஞ்சுகளை இங்கு விட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது தொடர்பில் தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் ஊடகம் ஒன்று வினவியபோது 

இலங்கை – சீன கூட்டு நிறுவனம் ஒன்று எவ்வித அனுமதியும் இன்றி இங்கு அட்டைக் குஞ்சுகளை விட்டு பண்ணையை ஆரம்பித்துள்ளதாக அதிகாரசபை கூறுகின்றது. இவ்வாறான பகுதியில் இந்த திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால் 

அதற்கு கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என அதிகார சபை தெரிவித்தது. எனினும் கடந்த ஒரு வார காலத்திற்குள் இலங்கை – சீன கூட்டு நிறுவனம் ஒன்றினால் சட்டவிரோதமாக அது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 

நேற்று அவ்விடத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதிகார சபை தெரிவித்தது. தாம் ஒத்திகையை மேற்கொண்டதாக 

இதன்போது சீனர்கள் கூறினாலும், அதனையும் அனுமதியின்றி செய்ய முடியாது என தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது. அனுமதியின்றி சீனர்களுக்கு கடல் அட்டை வளர்ப்பிற்கு அனுமதி வழங்கியது யார்?

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு