இன்றைய நாள் எப்படி 27/03/2018
இன்று!
ஹேவிளம்பி வருடம், பங்குனி மாதம் 13ம் தேதி, ரஜப் 8ம் தேதி,
27.3.2018 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி இரவு 12:43 வரை;
அதன் பின் துவாதசி திதி, பூசம் நட்சத்திரம் காலை 10:39 மணி வரை;
அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00-4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00-10:30 மணி
* குளிகை : மதியம் 12:00-1:30 மணி
* சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூராடம்
பொது : சர்வ ஏகாதசி, பெருமாள் வழிபாடு.
மேஷம்: அன்றாடப் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உறவினர் வருகையால் குடும்பச் செலவு அதிகரிக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள்
ரிஷபம்: மனதில் உற்சாகம் மேலோங்கும். நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இடையூறு விலகும். சேமிக்கும் விதத்தில் வருமானம் கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.
மிதுனம்: குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், லாபத்திற்கு குறைவிருக்காது. பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
கடகம்: மனதில் இருந்த சஞ்சலம் மறையும். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். ஆரோக்கியம் பலம் பெறும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும்.
சிம்மம்: திறமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கூடும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் சுமாராக கிடைக்கும்.பழைய நண்பர்களைச் சந்திக்க வாய்ப்புண்டாகும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
கன்னி: எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணியில் ஈடுபடுவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும். பெண்கள் குடும்ப வளர்ச்சிக்காகப் பாடுபடுவர்.
துலாம்: பெருந்தன்மையுடன் பிறருக்கு உதவி செய்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்கும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். உறவினர்களுடன் சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள்.
விருச்சிகம்: எதிர்மறையான சூழலில் இருந்து விலகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்படுவர். வீடு, வாகன வகையில் மராமத்துச் செலவு உண்டாகும்.
தனுசு: குடும்பத்தினரின் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் சுமார். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்க நேரிடலாம். வெளியூர் பயணத்தின் போது விழிப்புடன் இருக்கவும்.
மகரம்: மனச்சாட்சிக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். திட்டமிட்ட பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் லாபம் உயரும். நண்பர் கேட்ட உதவியை செய்து மகிழ்வீர்கள்.
கும்பம்: உலக நடப்பு அறிவதில் ஆர்வம் அதிகரிக்கும். இஷ்ட தெய்வ அருளால் நன்மை மேலோங்கும். தொழில். வியாபாரத்தில் ஆதாயம் கூடும். கூடுதல் சொத்து வாங்க திட்டமிடுவீர்கள்.
மீனம்: குடும்பத்தினரின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பெண்கள் சிக்கனம் மூலம் சேமிக்க முயல்வர். ஆரோக்கியம் பலம் பெறும்.