SuperTopAds

கறுப்பினத்தவர் கொலை வழக்கில் பரபரப்பு தீர்வு!! -அமெரிக்கா பொலிஸ் அதிகாரி குற்றவாளி என அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
கறுப்பினத்தவர் கொலை வழக்கில் பரபரப்பு தீர்வு!! -அமெரிக்கா பொலிஸ் அதிகாரி குற்றவாளி என அறிவிப்பு-

அமெரிக்காவில் கறுப்பினத்தவரை வீதியில் வைத்து காலால் நெரித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியா பொலிஸ் நகரைச் சேர்ந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு என்பவரின் கழுத்தில் பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் தனது கால் முட்டியை வைத்து அழுத்தி, மூச்சு திணறவைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இச் சம்பவம் கடந்த ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி நடைபெற்றது. பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் அங்கு நடந்த மாபெரும் போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கியது.

ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 பொலிஸார் மற்றும் மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜார்ஜ் பிளாய்ட் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. அவரின் குற்றத்துக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.