எகிப்தில் தடம் புரண்ட பயணிகள் ரயில்!! -11 பேர் பலி: 98 பேர் காயம்-
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பயணிகள் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
எகிப்தில் அடிக்கடி ரயில் விபத்து ஏற்படுவது உண்டு. இந்நிலையில் கெய்ரோவில் இருந்து நைல் டெல்டா நகருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று கலியோபியா மாகாணத்தில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.
இதில் 11 பேர் பலியானார்கள். நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக எகிப்தின் ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 1,793 ரெயில் விபத்துக்கள் நடந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வருடத்திற்கு முன்னதாக, மத்தியதரைக்கடல் துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரியாவுக்கு வெளியே இரண்டு பயணிகள் ரெயில்கள் மோதிக்கொண்டதில் 43 பேர் பலியானார்கள். கடந்த 2016ம் ஆண்டில், கெய்ரோ அருகே இரண்டு பயணிகள் ரெயில்கள் மோதியதில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டனர்.
கெய்ரோவிலிருந்து தெற்கு எகிப்துக்கு பயணித்த அதிவேக ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். கடந்த 2002ல் எகிப்தின் மிக மோசமான ரெயில் விபத்து இதுவாகும்.