மியான்மரில் 23 ஆயிரம் கைதிகள் விடுதலை!! -பொது மன்னிப்பு வழங்கியது இராணுவம்-

ஆசிரியர் - Editor II
மியான்மரில் 23 ஆயிரம் கைதிகள் விடுதலை!! -பொது மன்னிப்பு வழங்கியது இராணுவம்-

மியான்மரின் திங்கியன் புத்தாண்டையொட்டி 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு அந்நாட்டு இராணுவம் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளது.

மியான் நாட்டை பொறுத்தவரையில் மிக முக்கியமான பொது விடுமுறைகளின்போது கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. 

இவ்விடம் தொடர்பில் அந்நாட்டு இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- இராணுவ தலைவர் ஆங் ஹேலிங் 173 வெளிநாட்டவர்கள் உள்பட 23 ஆயிரத்து 47 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளதாகவும், மேலும் பலருக்கு தண்டனை காலத்தை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் விடுதலை செய்யப்பட்டுள்ள 23 ஆயிரம் கைதிகளில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் கைது செய்யப்பட்ட ஜனநாயக ஆர்வலர்களும் அடங்குவார்களா என்கிற தகவல் வெளியாகவில்லை.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு