SuperTopAds

சூயஸ் கால்வாயை முடக்கிய கப்பலை சிறைப்பிடித்த எகிப்து!! -900 மில்லியன் டொலர் ,ழப்பீடு கேட்டு பிடிவாதம்-

ஆசிரியர் - Editor II
சூயஸ் கால்வாயை முடக்கிய கப்பலை சிறைப்பிடித்த எகிப்து!! -900 மில்லியன் டொலர் ,ழப்பீடு கேட்டு பிடிவாதம்-

எகிப்தின் சூயஸ் கால்வாயில் கடந்த மாதம் ‘எவர் கிவன்’ என்ற கண்டய்னர் சரக்குக் கப்பல் சிக்கிக்கொண்டது. இதனால் ஒரு வாரத்துக்கு உலக வணிகத்தில் ஒரு பகுதியே முடங்கியது. 300ற்க்கும் மேற்பட்ட கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் தேங்கின.

ஒரு வாரத்துக்கு பின் கரைதட்டிய கப்பல் விடுவிக்கப்பட்டு நிலைமை சீரானது. இந்நிலையில், ஒரு வாரமாக நஸ்டத்தை ஏற்படுத்திய எவர் கிவன் கப்பலை எகிப்து அதிகாரிகள் சிறைப்பிடித்து வைத்துள்ளனர். 

மேலும், இழப்பீடு வழங்கிய பின் கப்பல் விடுவிக்கப்படும் என எகிப்து அரசு தெரிவித்துள்ளது. எவர் கிவன் கப்பலின் உரிமையாளர் ஜப்பானை சேர்ந்த சோய் கிசன் கைசா நிறுவனம். 

எகிப்து லெப்டனண்ட் ஜெனரல் ஒசாமா ரபி செய்தியாளர்களிடம் பேசியபோது, “கப்பல் அதிகாரப்பூர்வமாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்கப்படும் வரை கப்பல் விடுவிக்கப்படாது” என்று தெரிவித்துள்ளார்.

எகிப்து அரசு குறைந்தபட்சம் 900 மில்லியன் டாலர் ,ழப்பீடு கேட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். போக்குவரத்தை சீராக்க தேவையான தொகை, போக்குவரத்து முடங்கியதற்கான தொகை, ஒரு வாரத்துக்கான வருமானம் என்பவற்றை சேர்த்து 900 மில்லியன் டாலர் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும், எவர் கிவன் கப்பல் உரிமையாளர் நிறுவனத்திடம் இருந்து .துவரை தகவல் இல்லை. இழப்பீடு தொகை குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒசாமா ரபி தெரிவித்துள்ளார்.