ஈரானில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ரொக்கெட் தாக்குதல்!!
ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க படைத்தளத்தின் விமானநிலையத்தை குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் ரொக்கெட் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
ஈரான் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துதல், ஐ.எஸ், அல்கொய்தா பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்க படைகள் அங்கு படைத்தளங்களை அமைத்து அங்கிருந்தவாறு ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினரை குறிவைத்து ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈராக் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமான குர்திஷ்தானில் உள்ள எர்பில் நகரில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.
இந்த விமான நிலையத்தின் ஒருபகுதியில் அமெரிக்க படையினர் படைத்தளம் அமைந்துள்ளது. அந்த படைத்தளத்தை குறிவைத்து ஏர்பில் சர்வதேச விமான நிலையம் மீது நேற்று ஆளில்லா விமானம் மூலம் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ராக்கெட் தாக்குதல் ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்களால் நடத்தப்பட்டது என குர்திஸ்தான் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.