3,000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!! -எகிப்தில் ஆச்சரியம்-
எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 3,000 ஆண்டுகள் பழமையான நகரம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்தின் தெற்கு மாகாணமான லக்ஸரில் இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் ஆய்வாளர் சாஹி ஹவாஸ் தெரிவித்தார்.
இது பண்டைய எகிப்தின் ஒரு பொற்காலம் என்று கருதப்படுகிறது. 18 ஆவது வம்சத்தைச் சேர்ந்த மன்னன் மூன்றாம் அமென்ஹோடெப்பின் கீழ் இந்த நகரம் ,ருந்ததாகக் கூறப்படுகிறது.
மன்னர் துதன்கமுன் கட்டிய கோயிலைத் தேடி இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்ட நிலையில் இந்த பழமையான நகரம் கிடைத்துள்ளது.
பழங்காலத்தைச் சேர்ந்த மண், செங்கல் வீடுகள், கலைப்பொருட்கள், கருவிகள் அன்றாடம் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், தனித்தனி அறைகள், மோதிரங்கள், வண்ண மண்பாண்டங்கள், களிமண்ணால் ஆன நூல்நூற்பு மற்றும் நெசவு கருவிகள் இங்கு கிடைத்துள்ளன.
இந்த நகரத்தை மன்னர் மூன்றாம் அமென்ஹோடெப்பின் பேரன் துதன்கமுன் மற்றும் துதன்கமுனின் மகன் அய் ஆகியோர் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.