நைஜீரியா சிறைச்சாலை மீது திடீர் தாக்குதல்;!! -1800ற்க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்-

ஆசிரியர் - Editor II
நைஜீரியா சிறைச்சாலை மீது திடீர் தாக்குதல்;!! -1800ற்க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்-

நைஜீரியா நாட்டில் உள்ள சிறைச்சாலை ஒன்றின் மீது ஆயுததாரிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலை அடுத்து அந்தச் சிறையில் இருந்த 1,844 கைதிகள் தப்பியோடியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டின் தென்கிழக்கு நகரமான ஓவெர்ரியில் உள்ள சிறைச்சாலை அருகே நேற்று திங்கட்கிழமை லொறி, பிக்-அப், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் வந்திறங்கிய ஆயுததாரிகள் திடீரென சரமாரியாக தாக்குதல் நடத்திக் கொண்டு சிறைச்சாலைக்குள் நுழைந்தனர்.

இந்தத் தாக்குதலின்போதே சிறையில் இருந்த 1,800 கைதிகள் தப்பியோடியுள்ளனர். தாக்குதலை அடுத்து காணாமல் போயிருந்த ஆறு கைதிகள் திரும்பி வந்துள்ளனர். 35 பேர் தப்பிக்க மறுத்துவிட்டனர்.


Radio