இந்தோனேசியாவில் மிகப்பெரிய அனர்தம்!! -வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகளில் சிக்கி 101 பேர் பலி-

ஆசிரியர் - Editor II
இந்தோனேசியாவில் மிகப்பெரிய அனர்தம்!! -வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகளில் சிக்கி 101 பேர் பலி-

இந்தோனேசியா மற்றும் அதன் அண்டை நாடான திமோர் - லெஸ்டே ஆகியவற்றில் நேற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது. 

இயற்கை அனர்த்தங்களில் சிக்கி காணாமல் போனவர்கள் பலர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

அந்நாட்டின் புளோரஸ் தீவில் இருந்து தீவுக்கூட்டத்திற்கு கிழக்கே உள்ள சிறிய தேசமான திமோர் - லெஸ்டே வரை பெய்த கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசிய நகரமான சுமேடாங்கில் ஜனவரி மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Radio