SuperTopAds

ஜ.நா அமைதிப்படை மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்!! -4 பேர் பலி: மாலி நாட்டில் பயங்கரம்-

ஆசிரியர் - Editor II
ஜ.நா அமைதிப்படை மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்!! -4 பேர் பலி: மாலி நாட்டில் பயங்கரம்-

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையினர் 4 பேர் உயிரிழந்தனர்.

அங்கு அல்கொய்தா, ஐ.எஸ் மற்றும் அதன் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதுடன், அந்நாட்டில் 2012 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவெடுத்துள்ளன. இந்த கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு இராணுவம் ஈடுபட்டு வருகிறது. மேலும், அங்கு மீண்டும் அமைதி திரும்ப 2013 ஆம் ஆண்டு முதல் ஐ.நா. அமைதிப்படையும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 

இருப்பினும் பயங்கரவாத குழுக்கள் பாதுகாப்பு படையினர் மீதும், ஐ,நா. அமைதிப்படையினர் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள அஹ_லிஹட் என்ற இடத்தில் அமைந்துள்ள ஐ.நா. அமைதிப்படை தளத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். 

இத் திடீர் தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையினர் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். ஐ.நா. அமைதிப்படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் சில பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.