விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசி!! -கண்டுபிடித்தது ரஸ்யா-
கொரோனா வைரஸ் நாய், பூனை மற்றும் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மிக தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.
இதனிடையே கொரோனா வைரஸ் மனிதர்கள் மட்டும் இன்றி நாய், பூனை மற்றும் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது. கார்னிவாக்-கோவ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை ரஸ்யாவின் விலங்குகளின் ஆரோக்கியத்துக்கான மத்திய ஆணையம் உருவாக்கியுள்ளது.