SuperTopAds

நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்!! -கொரோனாவால் சவாலான கட்டத்திற்குள் கனடா-

ஆசிரியர் - Editor II
நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்!! -கொரோனாவால் சவாலான கட்டத்திற்குள் கனடா-

கனடா கொரோனா தொற்றால் சவாலானதொரு காலகட்டத்துக்குள்  நுழைந்துள்ளது. மக்கள் பொது சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடித்து, மோசமான நிலை ஏற்படாமல் தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என அந்நாட்டின் தலைமை பொது சுகாதார அதிகாரி தெரேசா டாம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முகப்புத்தகத்தில் நேற்று கேள்வி-பதில் அமர்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட வைத்தியர் டாம் மேலும் தெரிவிக்கையில்:- 

கனடியர்கள் கூட்டமாக ஒன்று கூடுவதற்கான நேரம் இதுவல்ல. நாடு தொற்று நோயின் மூன்றாவது அலையை எதிர்கொண்டுள்ள நிலையில் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவுகள் நிரம்பி வருகின்றன.

அனைவருக்குமான தடுப்பூசிகளை வழங்க இன்னும் சிறிது காலம் தேவைப்படும் நிலையில் கொரோனாவை ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும்.

புதிய பிறழ்வு கொரோனா வைரஸ்கள் தற்போது அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. 

இவ்வாறான நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த முயல்கின்றோம். தடுப்பூசி போட விரும்பும் ஒவ்வொரு கனேடியரும் தமக்கான ஒரு தடுப்பூசியை அநேகமாக ஜூன் மாத இறுதிக்குள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.