பிரான்ஸில் முடக்கல் நிலை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பு!! -பாடசாலைகளுக்கும் பூட்டு: ஜனாதிபதி அறிவிப்பு-
பிரான்ஸ் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்படுவதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். இதன் போது பாடசாலைகளும் மூடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் தலைநகர் பாரிஸ் உட்பட 19 பிராந்தியங்களில் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைளால் முழுமையாக முடங்கவேண்டியதில்லை. எனினும் தொடர்புகளை மக்கள் மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மக்ரோன் அறிவித்துள்ளார்.
புதிய கட்டுப்பாடுகளை இயன்றவரை தவிர்க்கவே நாங்கள் முயன்றோம். எனினும் இப்போது நாங்கள் செயற்படாவிட்டால் கட்டுபாட்டை முழுமையாக இழந்துவிடுவோம்.
புதிய கட்டப்பாட்டு நடவக்கையின் கீழ் ஏப்ரல் 26 வரை 3 வாரங்களுக்கு அனைத்து பாடசாலைகள் மற்றும் பகல் பராமரிப்பு மையங்களையும் மூப்படும்.
நாடு தழுவிய இலகுபடுத்தப்பட்ட சமூக முடக்கல் காலத்தில் வெள்வேறு பிரெஞ்சு பிராந்தியங்களுக்கு இடையிலான பயணங்கள் தடைசெய்யப்படும். அத்துடன், 19 பிராந்தியங்களில் தற்போது அமுலில் உள்ள 7 மணிக்குப் பின்னரான இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிரான்சின் அனைத்து பகுதிகளுக்கும் நீடிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.