மியான்மரில் இருந்து தப்பியோடிய 3,000 கிராம மக்கள்!! -தாய்லாந்தில் தஞ்சம்: காட்டிற்குள் பதுங்கியும் வாழ்வு-
மியான்மரின் தென்கிழக்கு கரேன் எல்லைப் பிராந்தியத்தைச் சேர்ந்த சுமார் 3,000 கிராமவாசிகள் அங்கிருந்து தப்பித்து இன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்திற்குள் புகுந்து தஞ்சமடைந்துள்ளனர்.
மியான்மரின் கரேன்னி இனக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள மட்ரா மாவட்டத்தின் 5 பகுதிகளில் அந்நாட்டு இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக கரேன் மகளிர் அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்சமயம் 3,000 ற்க்கும் மேற்பட்டோர் தாய்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும்
அதிகளவான கிராம மக்கள் காட்டில் பதுங்கி உள்ளனர் என கரேன் மகளிர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.