கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை பரிசோதித்தது வடகொரியா!! -அச்சத்தில் உலக நாடுகள்-
ஐ.நா.வின் தீர்மானத்தை மீறி கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து இலக்கை தாக்கும் இரு ஏவுகணைகளை ஏவி வடகொரிய பரிசோதித்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனைக்கு தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்களின் கீழ் இவ்வாறான கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுமார் 450 கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்று தாக்கும் வட கொரியாவின் ஏவுகணை சோதனை இந்த தீர்மானத்தை மீறும் வகையில் அமைந்துள்ளது.
ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், வட கொரியாவின் இந்த நடவடிக்கை அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனினும் ஒலிம்பிக் போட்டிகள் பாதுகாப்பாக இடம்பெறும் என பிரதமர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.