பிரான்ஸில் கொரோனா தீவிரம்!! -மீண்டும் இன்று நள்ளிரவு முதல் ஒரு மாத பொது முடக்கம் அமுல்-
பிரான்ஸில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் அந்நாட்டின் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட 16 பிராந்தியங்களில் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஒரு மாதம் பொது முடக்க நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இம்முறை பொது முடக்கம் முன்னரைப் போன்று கடுமையானதாக இருக்காது. உடற்பயிற்சி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான மக்கள் கட்டுப்பாடுகளுடன் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் அத்தியாவசியமற்ற வணிக நிறுவனங்கள் மூடப்படும். எனினும் பாடசாலைகள் திறந்திருக்கும். மக்கள் தங்கள் வீட்டிலிருந்து 10 கி.மீ தூரத்துக்குள் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவார்கள். உரிய காரணம் இன்றி நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படாமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.