யாழ்.நெடுந்தீவு கடற்கரையில் ஒதுங்கிய இந்திய இழுவை படகு..! படகிலிருந்த மீனவர்கள் எங்கே என பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு கடற்கரையில் ஒதுங்கிய இந்திய இழுவை படகு..! படகிலிருந்த மீனவர்கள் எங்கே என பரபரப்பு..

யாழ்.நெடுந்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய இந்திய இழுவை படகு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் படகில் பயணித்தவர்கள் நெடுந்தீவுக்குள் நுழைந்துவிட்டனரா? என சர்ச்சை எழுந்தபோதும் படகில் இருந்தவர்கள் இந்தியாவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

நெடுந்தீவு கடற்பரையில் இந்திய இழுவை படகு ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் படகை சோதனையிட்டபோது படகில் ஆட்கள் யாருமற்ற நிலையில் படகு இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்துள்ளது. 

இதனையடுத்து படகில் இருந்தவர்கள் நெடுந்தீவுக்குள் நுழைந்திருக்கலாம். என சந்தேகிக்கப்பட்டதால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. ஆனாலும் குறித்த படகு தமிழகம் கோட்டை பட்டினத்தை சேர்ந்த ரமேஷ் த/பெ மாரியாசாரி 

என்பவருக்கு சொந்தமான விசைப்படகு (படகு எண் : IND-TN-08-MM-145) என அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், நேற்று இரவு நெடுந்தீவு கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 10:00 மணியளவில் படகு பழுதடைந்த நிலையில்,

படகில் இருந்த நான்கு மீனவர்களும் வேறு படகில் தமிழகம் திரும்பியிருக்கின்றனர். குறித்த படகில் சாகுல்ஹமீது த/பெ ஜெய்னுல்லாப்தின் -வயது- 42 (கோட்டைப்பட்டிணம்) மருது த/பெ கோவிந்தராஜ் - வயது - 48 (கோட்டைப்பட்டிணம்)

வெற்றிவேல் த/பெ முருகன் - வயது - 26 (கோட்டைப்பட்டிணம்) நூர்முகமது த/பெ லாசர்உசைன் - வயது - 22 (கோட்டைப்பட்டிணம்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு