கனடிய பிரதமர் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்தவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வீட்டு வளாகத்துக்கள் ஆயுதங்களுடன் நுழைந்த நபருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் திகதி கோரே ஹர்ரன் என்பவர் கைகளில் ஆயுதங்களுடன் நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
அப்போது வீட்டில் பிரதமரோ, குடும்பத்தினரோ இல்லை என்ற போதிலும்ட, அவர் மீது பிரதமர் வீட்டு வளாகத்தில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து, பிரதமரை அச்சுறுத்த முயற்சித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தபோது கோரே ஹர்ரன், தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவர் சமூகத்துக்கு ஆபத்தானவர் என்று அரசு தரப்பு சட்டத்தரணி வாதாடினார்.
தான் யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் அங்கு செல்லவில்லை என்று கோரே ஹர்ரன் குறிப்பிட்டார். இருப்பினும் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ராபர்ட் தீர்ப்பு அளித்தார்.