இன்றைய நாள் எப்படி 21/03/2018
இன்று!
ஹேவிளம்பி வருடம், பங்குனி மாதம் 7ம் தேதி, ரஜப் 2ம் தேதி,
21.3.2018 புதன்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி மாலை 4:04 வரை;
அதன் பின் பஞ்சமி திதி, பரணி நட்சத்திரம் இரவு 7:30 வரை;
அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00-1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30-9:00 மணி
* குளிகை : காலை 10:30-12:00 மணி
* சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி.
பொது : சதுர்த்தி விரதம், விநாயகர் வழிபாடு.
மேஷம்: உங்களின் பேச்சு செயலில் தயக்கம் ஏற்படலாம். தொழிலில் லாபம் சுமாரான அளவில் இருக்கும். பெண்கள் செலவுக்காக கடன் வாங்க நேரிடலாம். பிராணிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.
ரிஷபம்: மனதில் நேர்மை நிறைந்திருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள்.
மிதுனம்: வாழ்வில் மனச்சாட்சிப்படி நடந்து கொள்வீர்கள்.தொழில், வியாபாரத்தில் வருகிற குளறுபடியை சரி செய்ய முயல்வீர்கள். லாபம் சுமார். மற்றவர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம்.
கடகம்: புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தாமதமான பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள்.தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும்.சேமிப்பு கூடும். குடும்ப விவகாரத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும்.
சிம்மம்: நண்பர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.
கன்னி: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். வாகனத்தில் பராமரிப்புச் செலவு ஏற்படலாம்.
துலாம்: குடும்ப விஷயத்தைப் பற்றி பிறரிடம் பேச வேண்டாம். இஷ்ட வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.
விருச்சிகம்: மதி நுட்பத்துடன் செயல்படுவீர்கள். கடந்த கால முயற்சிக்கான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் உயரும். பெற்றோரின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.
தனுசு: நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் உயரும். பூர்வீக சொத்து மூலம் திடீர் லாபம் வரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
மகரம்: கருத்துவேறுபாடு உள்ளவரிடம் விலகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.
கும்பம்: நண்பர்களால் பிரச்னைக்கு ஆளாகலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பணவரவை விட நிர்வாகச் செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர்.
மீனம்: பெற்றோரின் தேவையறிந்து உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் சீராக இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும். பிள்ளைகளின் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்