6 இலட்சம் டொலர்கள், 11 கிலோ தங்கத்தை சூகி சட்டவிரோதமாக பெற்றார்!! -இராணுவம் புதிய குற்றச்சாட்டு-
மியான்மரின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவரான ஆங் சான் சூகிக்கு எதிராக 6 இலட்சம் அமெரிக்க டொலர்கள் மற்றும் 11 கிலோ தங்கத்தை சட்ட விரோதமாகப் பெற்றுக் கொண்டதாக புதிய குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி முதலாம் திகதி மியான்மரில் இராணுவ ஆட்சி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவி ஆங் சான் சூகியை கைது செய்து தடுத்து வைத்துள்ள இராணுவம் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்திவரும் நிலையில் தற்போது மேற்படி புதிய குற்றச்சாட்டையும் இராணுவம் சாட்டியுள்ளது.
இருப்பினும் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் இராணுவ தரப்பினால் எந்த ஒரு ஆதாரமும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. ஆங் சான் சூகி மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை தேசிய ஜனநாயக லீக் கட்சி முற்றுமுழுதாக மறுத்துள்ளது.