ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எதிராக வழங்கு!! -12 மாகாண அரசுகள் ஒன்றாக தாக்கல்-
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எதிராக 12 மாகாண அரசுகள் ஒன்றாக இணைந்து வழக்கு தொடர்ந்துள்ளன.
ஜோ பைடன், தனது தேர்தல் பிரசாரத்தின் போதே, தான் வெற்றி பெற்றால் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என உறுதி அளித்தார். அதன்படியே பதவியேற்ற முதல் நாளிலேயே பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான நிர்வாக உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 19 ஆம் திகதி பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா முறைப்படி மீண்டும் இணைந்தது.
இந்தநிலையில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்ததன் மூலம் அமெரிக்காவுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படும் என கூறி ஜோ பைடன் நிர்வாகத்தின் மீது 12 மாகாண அரசுகள் கூட்டாக வழக்கு தொடர்ந்துள்ளன.