உலகில் மூன்றில் ஒரு பெண்கள் மீது பாலியல் வன்முறை!! -உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் அதிர்ச்சித் தகவல்-
உலகில் உள்ள பெண்களில் மூன்றில் ஒருவர் தமது வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பெரும்பாலான பெண்கள் 20 வயது நிறைவடையும் முன்னரே தங்களுக்கு நெருக்கமான உறவுகளால் பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளை அனுபவிக்க நேரிடுகிறது.
மேலும் உலக அளவில் 85 கோடியே 20 இலட்சம் பெண்கள் தங்கள் 15 வயதிலிருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று நோய் நெருக்கடி காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மேலும் அதிகரித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தமை குடும்ப வன்முறைகள் அதிகரிக்க மிகப்பெரிய காரணமாக அமைந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தனது ஆய்வில் மேலும் தகவல் தெரிவித்துள்ளது.