யாழ். மாவட்டத்தில் அரச அதிகாரிகளை பந்தாடும் அரசியல்வாதிகள்..! நல்லூர் பிரதேச செயலர் தற்போது இலக்கு..

ஆசிரியர் - Editor I
யாழ். மாவட்டத்தில் அரச அதிகாரிகளை பந்தாடும் அரசியல்வாதிகள்..! நல்லூர் பிரதேச செயலர் தற்போது இலக்கு..

யாழ்.மாவட்டத்தில்  நிர்வாக அதிகாரிகளை பந்தாடும் பட்டியலில் அடுத்ததாக நல்லூர் பிரதேச செயலாளர் இலக்கு  வைக்கப்பட்டு அரசியல் தரப்பால் பதிலீட்டு உத்தியோகத்தரிடம் சம்மதக் கடிதம் பெறப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலாளர்கள் இந்த அரசு ஆரம்பித்த காலம் முதல் அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டு தூக்கி எறியப்படுகின்றனர். 

இவை தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்தச் செய்திக்கு அமைச்சு எந்தவொரு கவனமும் செலுத்தாத காரணத்தால் தொடர்ந்தும் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறுகின்றன.

இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு மாவட்டச் செயலாளர் 3 மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், 3 பிரதேச செயலாளர்கள் பந்தாடப்பட்ட நிலையில் தற்போது 

நல்லூர்  பிரதேச செயலர் தூக்கி எறியப்படவுள்ளார். இந்தப் பிரதேச செயலாளர் நல்லூர் வளைவு திறப்பில் ஓர் அரசியல்வாதியை முநன்மைப்படுத்தவில்லை. 

என்றபோது இலக்கு வைக்கப்பட்டு இடமாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு நல்லூர் பிரதேச செயலாளரை தூக்கி எறிந்தால் பதிலாக நியமிக்கும் உத்தியோகத்தரை தேடும் காலத்தில் 

அண்மையில் நல்லூர் பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட  சமுர்த்தி நிகழ்வு ஒன்றினை நிறுத்துமாறு அரசியல் அழுத்தம் வழங்கியபோதும் அமைச்சரின் பணிப்பில் அந்த நிகழ்வு இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மாவட்ட உத்தியோகத்தர்கள் ஒருங்கிணைப்புத் தலைவரின் பெயரால் அச்சுறுத்தப்படுகின்றனர் என நேரடியாகவே குற்றம் சாட்டியதோடு கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திறமையாக செயல்படுகின்றார் எனவும் தெரிவித்தார்.

நல்லூரில் அமைச்சர் இவ்வாறு கருத்துரைக்க களம் அமைத்தாக எண்ணி உடனடியாக நல்லூர் பிரதேச செயலாளரை தூக்கி எறிந்து விட்டு புதிய பிரதேச செயலாளராக முன்னர் 

உடுவில் பிரதேச செயலாளராக பணியாற்றி தற்போது பிற மாவட்டம் ஒன்றில் பிரதேச செயலாளராக பணியாற்றுபவரை நல்லூர் பிரதேச செயலாளராக நியமிக்க முழு முயற்சிகள் இடம்பெறுகின்றன. 

இதற்காக பிற மாவட்டத்தில் தற்போது பணியாற்றும் பிரதேச செயலாளரிடமும் சம்மதக் கடிதம் எழுத்தில் பெறப்பட்டு விட்டது. இவ்வாறு இடம்பெறும் அரசியல் சதுரங்கம் தொடர்பில் உடனடியாகவே 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலம் நேற்றைய தினம் அமைச்சர் பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதோடு இன்றைய தினம் பிரதமரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு