யாழ்.பருத்துறையில் வயோதிப பெண் உயிரிழக்க கொரோனா தொற்றே காரணம்..! பாதுகாப்புடன் மின்னணு தகனம், யாழ்.மாவட்டத்தில் 2வது மரணம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறையில் வயோதிப பெண் உயிரிழக்க கொரோனா தொற்றே காரணம்..! பாதுகாப்புடன் மின்னணு தகனம், யாழ்.மாவட்டத்தில் 2வது மரணம்..

யாழ்.பருத்துறை - தும்பளை தெற்கு பகுதியில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த பெண் கொரோனா தொற்றினாலேயே உயிரிழந்துள்ளதாக கூறியிருக்கும் மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநித ஆ.கேதீஸ்வரன், 

உயிரிழந்தவரின் சடலத்தை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக இன்று பிற்பகல் யாழ்.கோப்பயன்மணல் இந்து மயானத்தில் மின் தகனம் செய்யப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் கூறியிருக்கின்றார். 

ஆசிரியை ஒருவருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் அவரது குடும்பத்தவர்களுக்கு ஏற்பட்ட தொற்றில் பாதிக்கப்பட்ட வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.பருத்தித்துறை தும்பளை தெற்கைச் சேர்ந்த 75 வயதுடைய வயோதிப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

அவர் கடந்த 23ஆம் திகதி கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டமை கண்டறியப்பட்டது. அவரை நொச்சிகாமம் கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.அங்கிருந்து கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்திற்று மாற்றப்பட்டார்.

இந்நிலையில் நேற்றய தினம் வீடு திரும்பிய அவர் திடீர் சுகயீனமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

சம்பவத்தை அடுத்து சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் படி அவர் கோவிட் -19 நோயால் உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. அதனால் வயோதிபப் பெண்ணின் சடலத்தை மின்தகன மைதானத்தில் தகனம் செய்ய 

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டாவது கொரோனா நோயாளி உயிரிழப்பு இதுவாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு