நாடு முழுவதும் கறுப்பு உடையணிந்து கத்தோலிக்க மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்..!

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் கறுப்பு உடையணிந்து கத்தோலிக்க மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்..!

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை முழுவதும் கத்தோலிக்க மக்கள் இன்றைய நாளை கறுப்பு ஞாயிறாக அறிவித்து கறுப்பு உடைகளுடன் போராட்டம் நடத்தியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் கத்தோலிக்க மக்கள் கறுப்புஆடையணிந்து ஆராதனைகளில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் விடுத்த வேண்டுகோளினை ஏற்று கறுப்புஞாயிறை கடைப்பிடிக்கும்  கத்தோலிக்கமக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு