SuperTopAds

ரஸ்யா மீது பொருளாதார தடை!! -அமெரிக்கா அரசு அதிரடி முடிவு-

ஆசிரியர் - Editor II
ரஸ்யா மீது பொருளாதார தடை!! -அமெரிக்கா அரசு அதிரடி முடிவு-

நவால்னி விவகாரத்தில் ரஸ்ய அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது அமெரிக்கா அரசாங்கம் நேற்று அதிரடியாக பொருளாதார தடைகளை விதித்தது,

ரஸ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி 2020 ஆண்டு செப்டம்பர் மாதம் ரசாயன தாக்குதலுக்கு ஆளானார். 

இதில் கோமா நிலைக்கு சென்ற நவால்னி, ஜெர்மனியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.‌ அதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 17 ஆம் திகதி ஜெர்மனியில் இருந்து ரஸ்யா திரும்பிய அவரை விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

இதையடுத்து மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நவால்னிக்கு 2 ஆண்டுகள் 8 மாதம் சிறை தண்டனை விதித்து ரஸ்ய கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இதனிடையே இந்த விவகாரத்தில் ரஸ்யாவுக்கு அமெரிக்கா அரசாங்கம் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.‌‌ அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதற்குப் பின் முதல் முறையாக ரஸ்ய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜோ பைடன், எதிர்க்கட்சித்தலைவர் நவால்னி மீதான நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்தார்.‌

இந்தநிலையில் நவால்னி விவகாரத்தில் ரஸ்ய அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது அமெரிக்கா அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை பொருளாதார தடைகளை விதித்தது,