இழப்பீடுகள் மக்களுக்கு ஆறுதலளிப்பதாக மட்டுமே உள்ளது..! அவர்களின் இழப்புக்களை ஈடு செய்ய முடியாது..

ஆசிரியர் - Editor I
இழப்பீடுகள் மக்களுக்கு ஆறுதலளிப்பதாக மட்டுமே உள்ளது..! அவர்களின் இழப்புக்களை ஈடு செய்ய முடியாது..

இழப்பீடுகளுக்கான தேசிய செயலகம் வழங்கும் இழப்பீடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் மட்மே என சுட்டிக்காட்டியிருக்கும் யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன், பாதிக்கப்பட்ட மக்களின் இழப்புக்களுக்கு ஈடாகாது. எனவும் கூறியிருக்கின்றார். 

யாழ்.மாவட்ட செயலகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிரிழப்பு, சொத்து இழப்பு, ஆலய புனரமைப்பு பணிகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு இன்று இழப்பீடுகளுக்கான தேசிய செயலகத்தினால் நடத்தப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் பல இழப்புக்களை சந்தித்துள்ளனர். 

இழப்புக்களில் ஈடுசெய்யமுடியாத இழப்புக்களும் காணப்படுகின்றன. எனினும் இவ் இழப்புக்களிற்கு அரசாங்கம் காலத்திற்கு காலம் மக்களின் கோரிக்கைகளைப் பெற்று கொள்கை அடிப்படையில் இழப்பீடு வழங்கி வந்துள்ளது. 

மாவட்டத்தில் 181 பயனாளிகளுக்கும், வழிபாட்டு இடங்களிற்கும் இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களிற்கான சொத்து இழப்பு, வன்செயல்களால் பாதிக்கப்பட்ட, காயமடைந்த, உயிரிழந்தவர்களுக்கான

கொடுப்பனவுகள், சேதமடைந்த ஆலயங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. மேலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு சலுகை அடிப்படையில் நான்கு வீத வட்டியுடன் சுயதொழில் 

கடன் திட்டம் மற்றும் வீடு புனரமைப்புக்கான கடன் திட்டமும் வழங்கப்படுகின்றன. இதைவிட பொதுமக்கள் சொத்து இழப்பு கொடுப்பனவுகள் 134 பயனாளிகளிற்கு 9 மில்லியன் ரூபாவும், ஊழியர்களிற்கான சொத்து இழப்பு கொடுப்பனவு 19 பயனாளிகளுக்கு

2.8 மில்லியன் ரூபாவும், வன்செயலால் இறந்த , காயமேற்பட்ட 10 பயனாளிகளுக்கும், சேதமடைந்த 18 ஆலயங்களிற்கும் மூன்று மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 

பிரதிநிதி கௌரவ சிவகுரு பாலகிருஸ்ணன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ். முரளிதரன் மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், 

பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு