புதிதாக 3 பேருக்கு கொரோனா!! -நகரத்திற்கே ஊடரங்கு போட்ட நியூசிலாந்து அரசு-
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடுகளில் உலக அளவில் நியூசிலாந்தும் ஒன்று. 50 இலட்சத்திற்கு அதிகமானோரை மக்கள் தொகையாக கொண்ட அந்நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 372 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றுக்கு உள்ளான 25 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நியூசிலாந்தில் அவ்வப்போது பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், அந்நாட்டின் மிகப்பெரிய நகரான ஆக்லாந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் இன்று சனிக்கிழமை முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.