5 கோடி பேருக்கு அமெரிக்காவில் தடுப்பூசி!! -ஜனாதிபதி ஜோ பைடன் தகவல்-

ஆசிரியர் - Editor II
5 கோடி பேருக்கு அமெரிக்காவில் தடுப்பூசி!! -ஜனாதிபதி ஜோ பைடன் தகவல்-

அமெரிக்காவில் ஏறத்தாள 5 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தகவல் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இதுவரை அங்கு 2 கோடியே 90 இலட்சத்து 55 ஆயிரத்து 493 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 5 இலட்சத்து 20 ஆயிரத்து 878 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு தற்போது பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

அங்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை நிலவரப்படி 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிக்கையில்:- 

எங்கள் நிர்வாகத்தின் முதல் 100 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி போட எண்ணியுள்ளோம். அதில் பாதியளவை இப்போது அடைந்து இருக்கிறோம். 

ஆனாலும் இது ஓய்வு எடுக்கம் தருணம் இல்லை. நாம் நமது கைகளை சுத்தம் செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். கடவுளின் பொருட்டு அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். அதிகமான மக்கள் தடுப்பூசி போடுகிறார்கள். வேகமாக இந்த தொற்றுநோயை நாம் வெல்லப்போகிறோம் என்றார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு